தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரம்: தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அறிவுரை
தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினை என்பது அவர்களது கட்சி சார்ந்த விடயம் ஆனால் அந்த விடயத்தில் அவர்கள் ஜனநாயகத்தை பேண வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனநாயகத்தை பேண வேண்டும்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,ஜனநாயகம் என்பது எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும்.மக்களிடமும் கட்சிக்குள்ளும் ஜனநாயகம் இருக்க வேண்டும். அடிமட்ட தொண்டர் முதல் உயர் மட்டம் வரை ஜனநாயகம் இருக்க வேண்டும்.
எனவே தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினையில் ஜனநாயகத்தை பேண வேண்டும்.
மேலும் தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனுக்கு எமது கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 58 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
