ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது
கடந்த 22ஆம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் வைத்து ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (29.1.2024) ரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட இருவரும் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குற்றத்திற்கு தலைமை
விசாரணைகளின் போது, குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் சந்தேகநபர் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கராப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து புஸ்ஸ பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்தக் குற்றத்தை இலங்கையிலிருந்து வழிநடத்திய நபரும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய, இந்தக் குற்றத்திற்கு தலைமை தாங்கியதாகக் கூறப்படும் சமன் குமார என்ற 54 வயதுடைய நபரும், குற்றத்திற்காக வந்த 65-2615 இலக்கம் கொண்ட மிட்சுபிஷி பெஜேரோ ஜீப் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர் குற்றத்தை செய்ய வந்த வாகனத்தின் சாரதியாகவே திட்டமிட்டு இந்த குற்றத்தை செய்துள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.