மீண்டும் தள்ளிப்போகும் தமிழரசு கட்சியின் வழக்கு

Kilinochchi Mullaitivu Ilankai Tamil Arasu Kachchi
By Rakesh Jun 04, 2025 06:00 PM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளிப்போடப்பட்டு செப்டெம்பர் முதலாம் திகதிக்குத் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் எதிராளிகளில் ஒருவராக இருந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அந்தப் பதவியில் இருந்து விலகிய நிலையில் காலமாகிவிட்டார்.

அவரது இடத்துக்கு மற்றொரு எதிராளியாகக் கட்சியின் தற்போதைய தலைவர் சி.வி.கே.சிவஞானத்தைப் பதிலீடு செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியதோடு, அடுத்த வழக்குத் தவணைக்கு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் பெண் ஆயுதங்கள்!!

ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் பெண் ஆயுதங்கள்!!

இடையீட்டு விண்ணப்பம்

இவற்றுக்கிடையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியைச் சேர்ந்த கட்சியின் பொதுச்சபை உறுப்பினர் என்ற பெயரில் சுப்ரமணியம் சபாரத்தினம் என்பவர் சார்பில் தன்னையும் வழக்கின் ஓர் எதிராளியாகச் சேர்த்துக்கொள்ளக் கோரும் இடையீட்டு விண்ணப்பம் ஒன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மீண்டும் தள்ளிப்போகும் தமிழரசு கட்சியின் வழக்கு | Tamilarasu Katchi Case Postponed Again

சட்டத்தரணி குருபரன் அதனைச் சமர்ப்பித்து வாதிட்டார். எதிராளிகளான சிறீதரன், யோகேஸ்வரன், குகதாசன் ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் அதனை ஆட்சேபிக்காமல் வரவேற்றார்.

ஆனால், சுமந்திரன் உள்ளிட்ட ஏனைய எதிராளிகளும் வழக்காளியும் அதனை ஆட்சேபித்தனர்.

ஆட்சேபனை 

தனக்காக நீதிமன்றத்தில் தானே முன்னிலையான எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ .சுமந்திரன், “இந்த வழக்கை முடிக்க விடாமல் இழுத்தடிப்பதற்காவே இவ்வாறு வழக்குத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் ஒருவரை இடையேயீட்டு எதிராளியாகச் சேர்க்க விண்ணப்பிக்கப்படுகின்றது” என்றார்.

மீண்டும் தள்ளிப்போகும் தமிழரசு கட்சியின் வழக்கு | Tamilarasu Katchi Case Postponed Again

மற்றைய எதிராளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கேசவன் சயந்தனும் அதேபோன்று ஆட்சேபனை முன்வைத்தார்.

அதனையொட்டி இரு தரப்பினரினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, இந்த விடயத்தை ஒட்டி இரு தரப்பினரும் எழுத்து மூல ஆட்சேபனைகளைச் செப்டெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும் படியும், அதன் பின்னர் நீதிமன்றம் அது தொடர்பில் உத்தரவு ஒன்றை வழங்கும் என்றும் குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தார். 

டக்ளஸ் தேவானந்தாவை நள்ளிரவில் அழைத்த சீ.வி.கே! பரபரப்பாகும் அரசியல்

டக்ளஸ் தேவானந்தாவை நள்ளிரவில் அழைத்த சீ.வி.கே! பரபரப்பாகும் அரசியல்

புலம்பெயர் தமிழர்களை மிரட்டும் அநுர அரசின் நேரடி கைது

புலம்பெயர் தமிழர்களை மிரட்டும் அநுர அரசின் நேரடி கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US