கொழும்பு வீதியில் கோர விபத்து - பரிதாபமாக உயிரிழந்த தமிழ் பெண்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதினால் இடம்பெற்ற விபத்தில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முந்தலம் பொலிஸ் பிரிவை சேர்ந்த குருஹன்வில்லுவ பிரதேசத்தை சேர்ந்த வைரய்யா வசுமதி என்ற 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் தனது கணவன் மற்றும் பிள்ளையுடன மோட்டார் சைக்கிளில் முந்தலம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்திற்கு கணவன் மற்றும் பிள்ளை சிறு காயங்களுடன் உயிர்த்தப்பிய நிலையில் தாய் படுகாயமடைந்து ஸ்தலத்திலேயே பலியானார்.
டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
