சிறையில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உயிராபத்து! வெளியான அதிர்ச்சித் தகவல்..
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை டக்ளஸ் தேவானந்தாவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது பல தகவல்கள் பேசப்படுகின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எம்பியுமான சுரேன் ராகவன் மஹர சிறையில் டக்ளஸ் தேவானந்தாவை தடுத்து வைப்பது பெரும் ஆபத்தானது என்று குறிப்பிட்டார்.
10ற்கும் மேற்பட்ட முறை அவரை படுகொலை செய்ய முயற்சித்துள்ளனர். சட்டரீதியாக எதனையும் செய்து கொள்ளுங்கள் , ஆனால் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என்றும் தெரிவித்தார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam