பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஈழத்தமிழர்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!
பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களால் பல ஆண்டுகளாக கழக ரீதியில் விளையாடப்படும் Kent premier league போட்டி எதிர்வரும் 31-08-2025 அன்று மூன்றாவது முறையாக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியானது லண்டன் Plumstead இல் உள்ளTeviot rangers வெளியக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏல நிகழ்வு
இந்த KPL போட்டிக்காக வீரர்களை தெரிவு செய்யும் ஏல நிகழ்வு கடந்த 09/07/2025 அன்று லண்டன் shooters hill sixth form கேட்போர் கூடத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்த Kent premier league போட்டியானது கடந்த 2023இல் Kent பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட சில கழகங்களிற்கிடையில் ஒரு கழக போட்டியாக ஆரம்பிக்கப்பட்டு, 2024இல் பிராந்திய மயமாக்கப்பட்டு Kent பிராந்தியத்தில் வசிக்கும் வீரர்களை மட்டும் உள்ளவாங்கி புள்ளிகள் மூலம் வீரர்கள் ஏல முறையில் தெரிவுசெய்யப்பட்டு 10 புதிய பிரிமியர் லீக் அணிகள் விளையாடி மாபெரும் போட்டியாக நடைபெற்றது.
இந்த வருடம் 2025இல் மூன்றாவது முறையாக வீரர்களின் வேண்டுகோளை ஏற்று போட்டியின் எல்லைகள் விரிவாக்கப்பட்டு, பிரித்தானியா முழுவதும் கழகங்களில் விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்கள் இந்த போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஏல நிகழ்வில் பிரித்தானியாவின் 50 முன்னணி மற்றும் சிறப்பு வீரர்கள் 8 பிரிமியர் கழகங்களிற்காக புள்ளிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2025 ஆம் ஆண்டுக்கான பிரிமியர் அணிகளாக,
1.UK STORMS
2.LEOPARD TAMIL TITAN
3.MAIDSTONE SUPER KINGS
4.KARIKAALAN UK
5.LONDON LIONS
6.EELAM KINGS WALES
7.RIDERS
8.RISING STARS ஆகிய 8 அணிகள் பங்கெடுத்து சிறப்பிக்கின்றன.
அத்துடன் இந்த ஆண்டு புது முயற்சியாக பிரித்தானியாவில் வளர்ந்து வரும் கழகங்களை ஊக்குவிக்கும் முகமாக 10 வளர்முக அணிகளிற்கான போட்டியும் இந்த வருடத்திற்கான KPL போட்டியில் நடைபெறவுள்ளது.
மேலும், இவ்வருடத்திற்கான போட்டியின் பிரதான அனுசரணையாளர்களாக Kent Maidstone நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அப்பம்மா கிச்சன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

























