ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடு
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய வேதனத்தை எழுத்து மூலமாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கே எமது வாக்கு என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி சங்கத்தின் நிர்வாகச் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
“அதிபர்கள் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்த்து முன்மொழியப்பட்ட வேதன அதிகரிப்பை ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் வழங்குவதற்கு எழுத்து மூலமான உறுதிமொழியை வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிபர்களும், ஆசிரியர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் வாக்களிப்பர்.
வரவு செலவுத் திட்டம்
அதுமட்டுமன்றி, ஏனைய நாடுகளில் உள்ளபடி கல்விக்கான நிதி ஒதுக்கீடு முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |