நாமலை ஜனாதிபதி வேட்பாளராக்கியதன் பின்னணி! மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள பயம்
மொட்டுக் கட்சி தனித்து போட்டியிடாவிட்டால் அந்த கட்சி முற்றிலும் அழிந்து விடும் என்ற பயம் கட்சிக்குள் காணப்படுவதாக அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மொட்டுக்கட்சியின் வாக்கு வங்கி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மொட்டுக்கட்சியின் உரிமையாளர்களாக ராஜபக்சர்கள் காணப்படுகின்றனர்.
அவர்கள் மக்களால் முழுவதும் துடைத்து எறியப்படுவதற்கு முன்னர் தங்களது வாக்கு வங்கியை தக்கவைப்பதற்காகவும் தங்களை நிலைப்படுத்திக் கொள்வதற்காகவும் தங்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்.
அந்த வகையிலேயே நாமல் ராஜபக்சவை வேட்பாளராக தற்போது நிறுத்தியுள்ளனர்.
எனினும், அவர் வெற்றிப்பெறுவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |