இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் இன்று தமிழ் சித்திரைப்புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
இதன்போது, கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் குறிப்பிடுகையில், "ஒவ்வொரு இனமும் தன்னுடைய கலாசாரம், பண்பாடு,அடையாளம், வீரம், பொருளாதாரம், இருப்பு, கலாசாரம் தொடர்பாக ஒவ்வொரு கலாசாரத்தை கொண்டுள்ளன.
அந்த வகையில் தமிழ்த்தேசிய இனத்தின் ஒரு அடையாளம் இந்த தமிழ் சித்திரைப்புத்தாண்டு தமிழ்த்தேசிய இனத்தின் அடுத்த நகர்வு அரசியல் இருப்பு தாங்களே தங்களை ஆளக்கூடிய அரசியல் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் எமது கரங்களை இறுகப்பற்றி இலக்கு நோக்கி பயணிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam
