இலங்கைக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப இருந்த தமிழ் அகதிகள்: பிரித்தானிய எடுத்துள்ள நடவடிக்கை
பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட டியாகோ கார்சியாவில் உள்ள தமிழ் அகதிகள் இலங்கைக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்புவதற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் சாகோஸ் தீவுகளின் ஒரு பகுதியான டியாகோ கார்சியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனடாவுக்கு தப்பிச்செல்லும் வழியில் 2021 அக்டோபர் 3ஆம் திகதியன்று இவர்கள் படகு பழுதடைந்தது. இதனையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு டியாகோ கார்சியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றில் வழக்கு பதிவு
இந்தநிலையில் இந்த ஏதிலிகள் அடைக்கலம் கோரியபோது, அது நிராகரிக்கப்பட்டு அவர்கள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும் இதனை ஆட்சேபித்து குழுவில் பத்து பேர், உயர்நீதிமன்றில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தநிலையில் மனுதாரர்களின் கோரிக்கைகளை தனித்தனியே பரிசீலிக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதுடன் இலங்கைக்கு திருப்பியனுப்பும் திட்டமும் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.