அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தற்கொலை!
அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
38 வயதான இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனக்கு தானே எரியூற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்துள்ளார்.
இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரியுள்ளார். எனினும், அவருக்கு தற்காலிகமாக தங்குவதற்கு, Bridging Visa வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், அவர் மன அழுத்ததில் இருந்ததாகவும், கடந்த வெள்ளிக்கிழமை தனக்கு தானே எரியூற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam