17 வருடங்களாக காத்திருக்கும் மகள்! இலங்கையர்களின் மனதை ரணமாக்கும் ஒரு பாச போராட்டம்
சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 17 வருடங்களாக மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு 9 வருடங்கள் கழித்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இவரின் 36 வயதான மனைவி யோகராணி 2018 இல் உயிரிழந்தார்.
ஆனந்த சுதாகர் மனைவியின் மரணச் சடங்கிற்கு அழைத்து வந்திருந்த போது, அவரின் மகள் சிறைச்சாலை பேருந்தில் ஏறிச்செல்ல முயற்சி செய்திருந்தமை பார்த்தவர்களின் மனதை கலங்க வைத்தது.
இன்று இத்தனை ஆண்டுகள் கழித்தும் தாயுமில்லாது, தந்தையுமில்லாது போராடி வரும் சுதாகரன் மகள் சங்கீதா இந்த அரசாங்கமாவது எனது தந்தையை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க...





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 18 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
