கொழும்பில் வாடகை அறையில் தங்கியிருந்தவர் கொடூரமாக கொலை
கொழும்பு, தெமட்டகொட பகுதியில் நேற்று முன்தினம் வாடகை அறையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 69 வயதான மாதம்பிட்டியகே சோமரத்ன என்பவர் எனவும் அவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.
வாடகை அறை
கொலை செய்யப்பட்டவர் தனது முச்சக்கர வண்டி தொழிலுக்கு மேலதிகமாக வட்டிக்கு கடன் வழங்கும் நபர் என்றும், அவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வாடகை அறையில் தங்கியிருந்தவரை கொலை செய்தவர்கள், கதவை மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொலையாளிகளை கண்டுபிடிக்க சிசிடிவி கமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan