இத்தாலியில் நெடுஞ்சாலையில் விழுந்த விமானம்: வெளியான காணொளி
வடக்கு இத்தாலியில் கடந்த 24ஆம் திகதியன்று, ஒரு இத்தாலிய ஃப்ரீசியா RG ரக விமானம் நெடுஞ்சாலையில் செங்குத்தாக விழுந்துள்ளது.
பெரும் தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறிய திகிலூட்டும் இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் காணொளியில் பதிவு செய்துள்ளனர்.
பரபரப்பு காணொளி
காணொளியில், விமானம் வான்வழி சாகசங்களை செய்து கொண்டிருந்து விட்டு, திடீரென பிரெசியா நெடுஞ்சாலையில் செங்குத்தாக விழுவது பதிவாகியுள்ளது.
இந்த துயர சம்பவத்தில் விமானத்தில் இருந்த இருவர் உயிரிழந்தனர்.
⚡ BREAKING: Plane crashed directly onto a highway in Italy:
— OSINT Updates (@OsintUpdates) July 23, 2025
A small aircraft crashes onto a highway in northern Italy’s Brescia province, resulting in the complete destruction of the plane and triggering a massive fireball.
A 75-year-old man and a 60-year-old woman on board… pic.twitter.com/vW5jWZrHKu
விபத்தில் உயிரிழந்தவர்கள் மிலானைச் சேர்ந்த 75 வயது விமானி செர்ஜியோ ரவக்லியா (Sergio Ravaglia) மற்றும் அவரது பயணி, 60 வயது அன்ன மரியா டி ஸ்டெபனோ (Ann Maria De Stefano) என தெரியவந்துள்ளது.
இத்தாலிய செய்தி நிறுவனமான ஜியோர்னாலே டி பிரெசியா (Giornale di Brescia) பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிட்டுள்ளது.[



