கனடா செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கனடா செல்ல முயன்ற நபர் ஒருவர் நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 மில்லியன் ரூபா செலுத்தி தயார் செய்த போலி கனேடிய வீசாவுடன் குறித்த நபர் கனடா செல்ல முயற்சித்துள்ளார்.
கொழும்பை சேர்ந்த 34 வயதான பயணி நேற்று டுபாய் ஊடாக கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனேடிய விசா
புறப்படும் முணையத்தில் இருந்த குடிவரவு அதிகாரி, பயணியின் கனேடிய விசாவின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் அடைந்து, அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணையின் போது அந்த நபர் அதிகாரிகளிடம் தனது கனேடிய விசாவைத் தயாரிப்பதற்காக முகவருக்கு 2 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri