வன்னியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பு மனுத்தாக்கல்
வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவினை தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் சுப நேரத்தில் வேட்புமனுவினை இன்றைய தினம் (09.10) தாக்கல் செய்துள்ளனர்.
பொங்கு தமிழ் தூபி்யில் அஞ்சலி
இதன்போது வன்னி மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளர் எஸ்.தவபாலன் மற்றும் ஏனைய வேட்பாளர்கள், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபி்க்கு சென்ற வேட்பாளர்கள் அங்கு அஞ்சலியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam