மன்னாரில் கட்டுப்பணம் செலுத்திய தமிழ் மக்கள் கூட்டணி
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்றைய தினம் (14) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளது.
மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
கட்டுப்பணம்
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகரசபை தேர்தலில் மாத்திரமே போட்டியிடும் நிலையில் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக போட்டியிட்டு மன்னார் நகர சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா தொழிலாளர் கட்சி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகரசபை மற்றும் நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையிலான சிறிலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மாவட்ட இணைப்பாளர் அபூபக்கர் தர்சின் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை ,மன்னார் பிரதேச சபை ,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இதேவேளை மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை தேசிய மக்கள் சக்தி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவை இன்றைய தினம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
