காலியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் முதியவர் கைது!
காலி (Galle) - அக்மீமன பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அக்மீமன பகுதியில் வசிக்கும் 72 வயதுடைய முதியவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று, பிஸ்தோல் ரக துப்பாக்கி ஒன்று, ரிப்பிட்டர் ரக துப்பாக்கி ஒன்று, எயார் ரைபிள் ரக துப்பாக்கி ஒன்று மற்றும் 49 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan