தமிழ் தேசிய கட்சிகள் பிளவுப்பட்டு இருப்பது எதிரிகளுக்கு சாதகமாக அமைகிறது : கருணாகரன் எம்.பி
அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளது கொள்கைகளும் ஒன்றாக இருந்தாலும் எங்களுக்குள்ளே பிளவு பட்டு இருப்பது அது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று(05.05.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ் மக்களது விடுதலை
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், வடகிழக்கு சிவில் சமூக குழுவானது ஒரே மேசையிலே தேசியக் கட்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகளும் ஒரு சில கட்சிகளையும் அழைத்து ஒரு மேசையில் இருப்பது ஒரு மகிழ்வான தருணமாக இருந்தது.
அந்த கூட்டு தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் இந்த கூட்டு ஒரு அரசியல் கூட்டம் தமிழ் மக்களது விடுதலை, அரசியல் விடுதலையை தமிழ் மக்களுக்கு அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான கூட்டாக அமையுமாக இருந்தால் உண்மையிலேயே நாங்கள் அனைவரும் சந்தோசப்படக்கூடிய நிகழ் வாக இருக்கும்.
ஏனென்றால் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வந்து ஆறு ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.இதுவரை நேரடியாக தேர்வு செய்யப்படாதவர் அவருக்கு முன்பு 6 ஜனாதிபதிகளில் நாங்கள் விரும்பி இரண்டு ஜனாதிபதிகளை கொண்டு வந்திருந்தோம்.
இனப்பிரச்சினை தீர்வு
ஆனால் நாங்கள் வாக்களிக்காத ஜனாதிபதியாக வருவதை நாங்கள் விரும்பாத நான்கு பேரும் இந்த நாட்டை ஆண்டு விட்டது அல்லது வாக்களிக்காத ஜனாதிபதிகளோ எங்களுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை.
எங்களது இனப்பிரச்சினை தீர்வுக்காக எதுவுமே செய்யவில்லை அந்த வகையில் இன்னும் நாங்கள் இந்த சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று வாக்களித்து ஏமாறாமல் எங்களது ஒற்றுமையை நாங்கள் காட்ட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.
ஒற்றுமையை காட்டுவது என்பது அவர்களை வழுக்கி கொண்டு வர வேண்டிய ஒரு நிலையாகவும் இருக்கலாம் ஏனென்றால் கட்சிகளும் வடகிழக்கை சேர்ந்த தமிழ் தேசிய கட்சிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தமிழ் நலன் விரும்பிகள் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் எந்த ஒரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கு மேலே வாக்கெடுத்து வெல்லக்கூடிய சூழ்நிலை ஒன்றை ஒன்று உருவாகாது என்கின்ற நேரத்திலே சில வேளைகளில் எங்களுடன் பேசலாம் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |