நிபந்தனையை மீறினால் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி
IMF நிபந்தனைகளை மாற்றினால் நாடு இரு வாரங்களில் வங்குரோத்தடையும் என்று போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2022 ஆம் ஆண்டு நாடு பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. எரிபொருள், சமையல் எரிவாயு இன்றி நாடு எதிர்கொண்ட நெருக்கடியிலிருந்தும் தேசிய அழிவிலிருந்தும் அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் உடன்படிக்கைக்கு சென்றது.
இலங்கைக்கு கிடைக்கும் டொலர்கள்
அதன் மூலம் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரை இலங்கையானது வழமையான பொருளாதார நிலையை முன்னெடுக்க முடியும் அதற்கு ஏதுவான திட்டத்துடன் அந்த கடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் 2027ஆம் ஆண்டிலும் அந்த வருடத்தின் வெளிநாட்டு நிதி நிலுவை 3911 அமெரிக்க டொலர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உடன்படிக்கையின் கீழ் 329 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு கிடைக்கவுள்ளதுடன் 2027ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தயாரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் 600 அமெரிக்க மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.
அந்த வகையில் உலக வங்கி 600 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதற்கு இணக்கப்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க கடன் நிவாரணமாக 1482 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |