ரணில், கோட்டாபய தொடர்பில் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ அறிவிப்பு (Video)
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கென ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. ஆகவே உடனடியாக செய்யக்கூடிய விடயங்கள் என்று பார்க்கும் போது அரசியல் கைதிகள் விவகாரம் இருக்கிறது. எனவே அவர்களுடைய விடுதலை குறித்து நாங்கள் முக்கிய தீர்மானத்தை இந்த அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைகலநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் எப்படி செயற்படும் என்பதை ஆராய்ந்துதான் எமது நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும். குறுகிய வட்டத்தில் இருந்து இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தாது, அறிவு ஜீவிகளின் ஆலோசனைகளை பெற்று எமது நிபந்தனைகளை வைப்பதுதான் சாலச் சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri