தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாகரை வேட்பாளர்களுடன் கலந்துரையாடல் (Photos)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி) சார்பில் கோரளைப் பற்று வடக்கு பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு வாகரையில் நேற்று(27.01.2023)இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா கலந்துக்கொண்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், வவுணதீவு பிரதேச சபைப் பிரதித் தவிசாளர் செல்லத்துரை, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் உட்பட வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்போது தேர்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்தும், முறையான விதத்தில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளல், தற்கால அரசியற் களச் சூழல் என்பன குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam