மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு: கட்சிகளை ஒருங்கிணைக்கும் புதிய நகர்வு
வடக்கு - கிழக்கில் முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படலாமா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர். செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் தெரிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கு இன்றையதினம் (10.12.2024) வழங்கி வைக்கப்பட்ட நிகழ்விலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.
குழுவில் ஒரு ஒற்றுமை
எமது நாடாளுமன்றக் குழுவில் ஒரு ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த ஒற்றுமை இல்லாமையினால் எமது தேசத்தில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளது.
அது தொடர்ந்தால் இங்கு இனப்பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்ற நிலமை ஏற்பட்டுவிடும்.
எனவே, இனம் சார்ந்த விடுதலையினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற வகையிலே நாம் ஒன்றிணைய வேண்டும்.
ஒன்றிணைந்தால் மக்கள் எங்களுடன் நிற்பார்கள். எனவே பாராளுமன்றுக்குள்ளும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாக சேர்ந்து பொது விடயங்களில் ஒன்றாக குரல் கொடுக்கும் நிலையினை ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் வடக்கு -கிழக்கில் முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படலாமா என்பது தொடர்பிலும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
