தமிழகத்தை அதிரவைத்த முதலமைச்சர் விஜயின் முதல் கையெழுத்து - சற்றுமுன்னர் அதிரடியாக அறிவிப்பு
புதிய இணைப்பு
தமிழ்நாட்டின் 13 ஆவது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின் சட்டமன்றத்திற்கு சென்று தனது முதல் கையெழுத்தை போட்டுள்ளார்.
இதற்கமைய, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், விஜயின் முதல் கையெழுத்தில் இடங்கிய கோப்புகள் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டணமில்லை.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் சிறப்பு படை அமைப்பு
போதை பொருள் களைப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சற்றுமுன்னர் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பு விழாவில், தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்புடன் தற்போது ”வந்தே மாதரம்” பாடலுடன் விஜய் பதவியேற்பு விழா தொடங்கியுள்ளது.
"ஜோசப் விஜய் என்னும் நான்.." நேரு உள்விளையாட்டு அரங்கில் குவியும் முக்கிய புள்ளிகள் - தயார்நிலையில் பலத்த பாதுகாப்பு வலயம்
பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு
“தளபதி டூ முதலமைச்சர்” என்ற முழக்கத்துடன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு வெற்றி கழகம் (TVK) கட்சியினர் மாநிலம் முழுவதும் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், விஜயின் முதல் கையெழுத்து பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரானதும் 5 ஆண்டுகளில் எத்தனை கோப்புகளில் கையெழுத்திட்டாலும் முதல் கையெழுத்து என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த வகையில் விஜய்யும் முதல் கையெழுத்தாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் கையெழுத்திடுவார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அவர் போடும் முதல் கையெழுத்து 200 யூனிட் மின்சாரம், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், மகளிர் உரிமைத் தொகை ரூ 2500, மதுவிலக்கு உள்ளிட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவர் முதல் கையெழுத்தாக போடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜோசப் விஜய் எனும் நான்.. ஆண்டவன் மீது ஆணையிட்டு.. உணர்ச்சி பொங்க முதலமைச்சர் பதவியை ஏற்றார் விஜய் LIVE
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri