"ஜோசப் விஜய் என்னும் நான்.." நேரு உள்விளையாட்டு அரங்கில் குவியும் முக்கிய புள்ளிகள் - தயார்நிலையில் பலத்த பாதுகாப்பு வலயம்
தமிழக அரசியலில் இன்று ஒரு முக்கியமான நாளாக பார்க்கப்படும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கத் தயாராகியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்க வருகை தந்துள்ளதுடன் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
ஜோசப் விஜய் எனும் நான்.. ஆண்டவன் மீது ஆணையிட்டு.. உணர்ச்சி பொங்க முதலமைச்சர் பதவியை ஏற்றார் விஜய் LIVE
சிறப்பு விருந்தினர் வருகை
இந்நிலையில், பதவியேற்பு விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சிறப்பு விருந்தினராக தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து, நேரடியாக பதவியேற்பு விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு தற்போது வருகை தந்துள்ளார்.








முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam