தமிழகத்தில் பிரவேசித்த கிளிநொச்சியை சேர்ந்த பொதுமகன் யார்? தேடும் தமிழக காவல்துறை!
படகு ஒன்றில் பயணித்த கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர், தமிழகத்துக்குள் பிரவேசித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தமிழக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கரையோரத்தில் கைவிடப்பட்ட படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதில் பயணித்த கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரே காணாமல் போயுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அவர், தமிழ்நாட்டிற்குள் பிரவேசித்திருக்கலாம் என தமிழக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்துக்குள் பிரவேசித்திருக்கலாம் என்று கருதப்படுபவர் தொடர்பான தகவல்கள் தரப்படவில்லை.
எனினும் உளவுத்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

