ஆண்டவன் மீது உறுதியிட்டு.. விஜய்யை நோக்கி கைகாட்டி பதவியேற்ற அமைச்சர்கள்! நெகிழ்ச்சியில் முதலமைச்சர்
தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் பதவியேற்று நிலையில், தற்போது அமைச்சரவை பதவியேற்பும் சத்தியப்பிரமாணமும் நடைபெற்று வருகின்றது.
அமைச்சர்கள் பதவியேற்பின்போது, ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகின்றேன் என்ற வார்த்தைகளை உச்சரிக்கும் போது பல அமைச்சர்கள் முதலமைச்சர் விஜய்யை பார்த்து கை நீட்டி உறுதி மொழி வழங்கியுள்ளனர்.
இந்த உணர்ச்சி மிகு தருணங்களின் போது, அரங்கம் முழுவதும், தொண்டர்கள் மற்றும் இரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் நிரம்பியுள்ளது.
அமைச்சராக பதவியேற்றுள்ள ராஜ்மோகன், தன்னுடைய பொறுப்பேற்பு மற்றும் சத்தியப்பிரமாணத்தின் போதும், ஆண்டவன் மீது உறுதியிட்டுக் கூறும் போது இருமுறையும் விஜய்யை நோக்கி கைநீட்டி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
“ராஜ்மோகன் எனும் நான், "சட்டப்படி அமையப்பெற்றுள்ள இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், மாநிலத்தின்அமைச்சராக எனது கடமைகளை நேர்மையாகவும், நம்பிக்கையுடனும், எந்தவித அச்சமோ, ஆதரவோ, விருப்பு வெறுப்போ இன்றி அரசியலமைப்புச் சட்டத்தின்படியும், சட்டத்தின்படியும் நிறைவேற்றுவேன் என்றும், ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன்” எனும் பொழுது விஜய்யை நோக்கி அவர் கை நீட்டியிருந்தார்.
"ஜோசப் விஜய் என்னும் நான்.." நேரு உள்விளையாட்டு அரங்கில் குவியும் முக்கிய புள்ளிகள் - தயார்நிலையில் பலத்த பாதுகாப்பு வலயம்
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan