தமிழ்நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்தல் முடிவுகள் - மும்முனை போட்டியால் மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறுமா..!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக கட்சியின் வருகையால், திமுக–அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத ‘தொங்கு சட்டசபை’ (Hung Assembly) உருவாகும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் திகதி நடைபெற உள்ளது.
அடுத்த தமிழக முதல்வர் யார்..! நாளை வெளியாகவுள்ள தேர்தல் முடிவு - முதல் முறையாக நடைமுறைப்படுத்தபடவுள்ள திட்டம்
அடுத்த முதலமைச்சர்
தமிழகத்தில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனக் கூறுகின்றன.

சில கணிப்புகள் மட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன.
ஆனால், காமாக்யா நிறுவனம் வெளியிட்ட எக்சிட் போல் கணிப்புகள் வேறுபட்ட படம் காட்டுகின்றன.
அதன்படி: திமுக கூட்டணி: 78–95 இடங்கள் அதிமுக கூட்டணி: 68–84 இடங்கள் தவெக: 67–81 இடங்கள் இந்த கணிப்புகள் மூன்று முக்கிய அணிகளுக்கும் பெரும்பான்மை (118 இடங்கள்) எட்டாத நிலையை சுட்டிக்காட்டுகின்றன.
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
தொங்கு சட்டசபை சாத்தியம்
ஒரு கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை எண்களைப் பெறாதபோது அது ‘தொங்கு சட்டசபை’ எனப்படும். தமிழ்நாட்டில் இதுபோன்ற நிலை இதுவரை நேரடியாக உருவாகவில்லை.

அப்படியான சூழல் அமைந்தால் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுகவுடன், தவெக கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை கூட்டணி அமைக்க தவெக ஒப்புக்கொள்ளவில்லை எனில், வெளியில் இருந்து அதிமுகவிற்கு மைனாரிட்டி ஆதரவு அளிக்கவும் வாய்ப்புள்ளது.
பெரும்பான்மை பலத்தோடு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க வரவில்லை எனில், தொங்கு சட்டசபை ஏற்படும்.
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
மீண்டும் தேர்தல்
எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை என்றால் தமிழ்நாட்டில் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும். அதன் பிறகு மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.

விஜய் தலைமையிலான தவெக கட்சியின் எழுச்சி, பாரம்பரிய இரு கட்சி அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதன் விளைவாக, தமிழகத்தில் முதல் முறையாக உண்மையான மும்முனை போட்டி உருவாகி, தேர்தல் முடிவுகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
you may Like this..
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam