ஈழத்தமிழர்களுக்கு கிடைக்காத நீதி: மக்களை ஏமாற்றிய தமிழ் தலைவர்கள்..!
கடந்த 17 வருடங்களாக தங்களின் இனத்திற்கு நடந்த துரோகங்களை மனதில் வைத்துக் கொண்டு, காணாமல் போன உறவுகளுக்காகவும், போர்க்களத்தில் இறந்து போன உறவுகளுக்காகவும் நீதி கோரி தமிழ் மக்கள் இதுவரையில் காத்திருக்கிறார்கள் என மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
17 வருட போராட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் இழந்த இழப்பிற்கான நீதியை வாங்கிய தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த தமிழ் தலைவர்கள் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனின் சிங்களமயமாக்கலை ஆதரிக்கும் சுமந்திரன் போன்றவர்கள் தான் தற்போது தமிழ் தேசியத்திற்குள் இருக்கிறார்கள்.
இவர்கள் எப்போதும், தமிழ் மக்களுக்கான நியாயத்தை வாங்கி தரப்போவதில்லை. ஏனெனின் தமிழ் மக்களோடு இருப்பவர்களுக்கே அவர்களின் வலியும் வேதனையும் புரியும்.
சிங்கள தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும் தலைவர்கள், கட்சிக்குள் வந்து தலைமை பதவிக்காக அடித்துக் கொள்கிறார்கள். உண்மையில், இது தமிழ் இனத்திற்கே அவமானத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
இதேவேளை, தமிழ் தேசியத்திற்கு என்னென்ன துரோகங்கள் நடக்கின்றன என்பதை காணொளியில் தொடர்ந்து பார்க்கலாம்.