மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் வாகன இறக்குமதி விவகாரம்.. அதிக விலையால் ஏற்படவுள்ள கடும் பாதிப்பு!
வாகன இறக்குமதி தொடர்பான எதிர்காலக் கொள்கைகள், தேவையின் அடிப்படையில் மட்டுமே இறக்குமதியை அனுமதிக்கும் வகையில் வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் திணைக்களத்தின் பொருளியல் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
உண்மையான தேவை இல்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்வது, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்கு தேவையற்ற செலவினத்தை ஏற்படுத்துகிறது என்று பேராசிரியர் துனுசிங்க தெரிவித்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேலும் அவர், வாகன இறக்குமதியாளர்கள் சமீபகாலமாக அதிக எண்ணிக்கையில் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதால், வாகன விற்பனையகங்களில் விற்கப்படாத வாகனங்கள் குவிந்து கிடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கூடுதல் கட்டணக் கட்டமைப்பின் காரணமாக, இறக்குமதியாளர்கள் வாகனங்களை அதிக விலைக்கு விற்பதன் மூலம் அதிக இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எனவே, உண்மையான தேவைகளுக்கு ஏற்ப மட்டுமே வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், பற்றாக்குறையாக உள்ள அந்நியச் செலாவணியைச் சுரண்டும் வகையில் அது இருக்கக்கூடாது என்றும் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கட்டுப்பாடற்ற இறக்குமதியை அனுமதிப்பது, விற்பனையகங்களில் வாகனங்கள் குவிக்கப்படுவதற்கும், அதே நேரத்தில் அதிக சந்தை விலையில் அதீத இலாபம் ஈட்டுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan