வெளிநாட்டில் தாய் - இலங்கையில் மகனின் விபரீத முடிவு
கம்பஹா, பியகம பகுதியில் பாடசாலை மாணவன் தனது வீட்டின் அறைக்குள் உயிரை மாய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பியகம, ஜயந்தி மாவத்தையைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் தாய் வெளிநாட்டில் வசிப்பதாகவும், வீட்டில் மாணவன், அவரது அண்ணா, தந்தை, தாத்தா மற்றும் தாம் வசித்து வந்ததாகவும் சிறுவனின் பாட்டி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
மகனின் விபரீத முடிவு
சம்பவத்தன்று மாணவன் பாடசாலைக்குச் செல்லவில்லை. ஏனையவர்கள் வேலைக்குச் சென்றிருந்த வேளையில், தாம் கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய வேளையில் இந்த விபரீதம் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர் மாய்ப்புக்கான காரணம் எதுவும் தமக்குத் தெரியவில்லை. மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என அவர் சாட்சியமளித்தார்.
இது உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை ராகம போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி ஆர்.எம்.ஏ. ரத்நாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டது.
உயிர் மாய்ப்பால் ஏற்பட்ட மரணம் என திடீர் மரண விசாரணை அதிகாரி, அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan