ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்
நெதர்லாந்தில் நீரில் மூழ்கிய நிலையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நீரில் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற போதே இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.
பிரான்ஸில் இருந்து சென்ற நண்பர்கள் குழுவுடன் இணைந்திருந்த வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பிக்க உதைபந்தாட்டம் மற்றும் படகுச்சவாரியில் ஈடுபட்ட வேளையில் தவறுதலாக பிரான்சில் இருந்து வந்தவர் நீரில் வீழ்ந்ததால் அவரை காப்பாற்ற நீரில் இறங்கிய அனுசன் அவரை படகில் ஏற்றிவிட்டு அவர் தவறுதலாக நீரில் மூழ்கியுள்ளார் அவரை அவருடன் சென்ற நண்பர்கள் தேடிய போதும் அவரைக் காணவில்லை உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
மீட்புப் பணியாளர்கள் 90 நிமிடங்கள் தேடுதலின் பின்னர் அனுசன் கண்டெடுக்கப்பட்டார். மீட்பு பணியாளர்கள் அவரது உயிரை மீட்க போராடியும் தோல்வியில் முடிந்தது . இவருடன் நீரில் மூழ்கிய மற்றவர் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan