அவுஸ்திரேலியாவில் தமிழ்ச் சிறுமியொருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ள பாராட்டு
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் Prime Minister’s Spelling Bee தேசிய போட்டியில் வெற்றிப்பெற்ற தமிழ்ச்சிறுமியொருவர் அந்நாட்டு பிரதமரிடமிருந்து (Scott Morrison) பாராட்டுக்களையும்,பரிசுகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
11 வயது தமிழ்ச் சிறுமியான தீக்சிதா கார்த்திக் எனும் சிறுமியே இவ்வாறு வெற்றி பெற்று பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
சில பிரிவுகளில் நடத்தப்படும் இப்போட்டியில் ஆண்டு 5-6 க்கான பிரிவில் தீக்சிதா வெற்றிபெற்றார்.
இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தீக்சிதா தற்போது மெல்பனில் வாழ்ந்து வரும் நிலையில்,குறித்த போட்டியில் வழங்கப்பட்ட 30 சொற்களில் 29 சொற்களை சரியாக எழுத்துக்கூட்டி உச்சரித்து போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.
குறித்த போட்டியில் மொத்தமாக 490 பள்ளிகளிலிருந்து சுமார் 21 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றிருந்த நிலையில்,தேசிய ரீதியில் வெற்றிபெற்ற மூவர் இவ்வாறு பாராட்டப்பட்டுள்ளனர்.
போட்டியில் வெற்றிபெற்ற மூவருக்கும் iPads, புத்தகங்கள், பள்ளிக்கான $1000 கூப்பன்கள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri