கரிநாள் போராட்டத்திற்காக இந்தியாவிலிருந்து ஒலித்த குரல்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்று கிடைக்காததால்தான் அவர்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளப்பட்டார்கள் என இயக்குனர் ரி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
ஈழ தேசத்தில் நாளைய தினம் அனுஷ்டிக்கப்பட உள்ள கறுப்பு தினத்திற்கு பூரண ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
ஈழத்தில் மக்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாளைய தினம் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுவதால் தமிழ் மக்களுக்கு என்ன சந்தோசம் கிடைத்துவிடும் விடிவு கிடைக்காததால்தான் தமிழ் மக்கள் கடலில் தத்தளிப்பது போல் தள்ளாடுகின்றார்கள்.

ஈழத்தில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்து, உலகம் முழுவதும் அள்ளி வீசப்பட்டிருக்கின்றார்கள் என்றால் என்ன காரணம்? தமக்குக் கிடைக்க வேண்டிய சுதந்திரம் கிடைக்காததால் தான் அவர்கள் அவ்வாறு இடம்பெயர்ந்துள்ளார்கள்.
ஈழத் தமிழர்கள்
நாளையதினம் அனுஷ்டிக்கப்பட உள்ள போராட்டம் என்பது ஒரு கனல் இது இன்றைக்கு பற்ற வைக்கப்பட்ட கனல் அல்ல என்றைக்கோ பற்றவைக்கப்பட்ட ஒரு கனல் என்று நான் கருதுகிறேன்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற தழிழ்நாடு இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இந்த போராட்டத்திற்கு எனது பூரண ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன், நான் என்றைக்கும் ஈழத் தமிழர்களுக்கு உணர்வுகளுக்கு பக்கபலமாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.