கடும் வறுமையால் அல்லலுறும் தமிழ் குடும்பம்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை (Video)
இடிந்து விழும் நிலையில் இருக்கும் வீடு மற்றும் மலசலகூடத்தால் தமது குடும்பத்திற்கு வாழ்க்கையே நரகமாகியுள்ளதாக கூறி கதறியழுகிறார் கந்தளாயை சேர்ந்த சரண்யா.
3 பிள்ளைகளின் தாயான இவர் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக தமது கஷ்டத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
வீட்டு திட்டத்திற்காக தமது வீட்டை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்ற போதும் கூட இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகிறார்.
இதன் காரணமாக மழை பெய்யும் நேரங்களில் வீடு இடிந்து விழுமோ என்ற பயத்தின் காரணமாக அயலில் உள்ள வீடுகளில் சென்று தங்க வேண்டிய நிலை தமது குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தமது வீட்டினை சீரமைத்து தர யாரேனும் நடவடிக்கை எடுத்தால் அது பெரும் உதவியாக இருக்கும் என்பதே அவரது மிகப்பெரும் அவாவாக இருக்கிறது.
இது தொடர்பான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகிறது இந்த காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
