கொழும்பில் தமிழ்க் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் இன்று (14.07.2023) அவரது வீட்டுக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சடலமாக மீட்க்கப்பட்ட நபர் முல்லைத்தீவைச் சேர்ந்தவரும் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் வசித்து வருபவருமான தனபாலசிங்கம் வைகுந்தன் (வயது 39) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த 7 வருடங்களாகக் குடும்பத்தினருடன் மகரகமவில் வசித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர விசாரணை
சிகை அலங்கார நிலையத்தில் பணியாற்றி வந்த குறித்த நபர், இன்று மாலை 5 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்புவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், வீட்டுக்கு வருகை தராத அவரைக் குடும்பத்தினர் இரவு 7.30 மணியளவில் தேடியபோது வீட்டுக்கு அருகாமையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |