பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா! ரெலோவின் தலைமைக்கு எதிராக மூத்த உறுப்பினர்கள் போர்க்கொடி

Sri Lankan Tamils Selvam Adaikalanathan Sri Lanka Politician
By Rakesh Jun 14, 2026 10:14 AM GMT
Report

ரெலோ (தமிழீழ விடுதலை இயக்கம்) அமைப்பின் தலைமைக்கு எதிராகப் பல மூத்த போராளிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், கட்சியின் தேசிய மாநாட்டை இரகசியமாக நடத்தித் தங்களது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளத் தலைமைப்பீடம் ஜனநாயக விரோத நகர்வுகளை மேற்கொண்டுள்ளது என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று(13) சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் 5000ற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்களால் படைக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5000ற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்களால் படைக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை

கட்சித் தலைமை

அங்கு அவர்கள் மேலும் கூறுகையில்,

"கட்சித் தலைமையின் தன்னிச்சையான அரசியல் தீர்மானங்கள், நிர்வாகச் சீர்கேடு, தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள் மற்றும் தவறான கூட்டணிகள் காரணமாகக் கட்சி கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன், மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளது.

பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா! ரெலோவின் தலைமைக்கு எதிராக மூத்த உறுப்பினர்கள் போர்க்கொடி | Tamil Eelam Liberation Organization Jaffna Press

இதனால் உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டு பலர் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

கட்சியின் நீண்ட வரலாற்றில், போராளிகளும் அங்கத்தவர்களும் தலைமைக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 21 அன்று வவுனியாவிலும், ஏப்ரல் 25 அன்று திருகோணமலையிலும் நடைபெற்ற தலைமைக் குழுக் கூட்டங்களில், எமது கடும் எதிர்ப்பையும் மீறித் தங்களது பதவிகள் பறிபோய்விடும் என்ற பீதியில் மாநாட்டைப் பிற்போடக் கட்சியின் தலைமைப்பீடத்தினர் தீர்மானித்தனர்.

அத்துடன், ஏற்கனவே எட்டு மாவட்டங்களில் முறையாக நடத்தப்பட்ட தெரிவுகளை இரத்துச் செய்து, புதிதாகப் பொதுக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தனர்.

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்கமாட்டோம் என்கிறார் அஜித் மானப்பெரும

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்கமாட்டோம் என்கிறார் அஜித் மானப்பெரும

அதிகார துஷ்பிரயோகம் 

இது கட்சி யாப்புக்கும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணானதாகும். அண்மையில் மன்னார், முல்லைத்தீவு தவிர்ந்த ஏனைய ஆறு மாவட்டங்களிலும் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் தமக்கு ஆதரவானவர்களை மட்டும் இரகசியமாக அழைத்து புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்துள்ளனர்.

தத்தம் பதவிகளைத் தக்கவைப்பதற்காக, பதவி வெறியில் செய்யும் இந்த அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கோழைத்தனமான செயல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா! ரெலோவின் தலைமைக்கு எதிராக மூத்த உறுப்பினர்கள் போர்க்கொடி | Tamil Eelam Liberation Organization Jaffna Press

இது கட்சியையே அழிக்கும் செயற்பாடாகும். நாளை (இன்று) ஞாயிற்றுக்கிழமை தேசிய மாநாடு என்ற போர்வையில் ஒரு கூட்டத்தை நடத்தி, தமக்குச் சாதகமாக நிர்வாகத் தெரிவுகளை மேற்கொள்ளத் தலைமைப்பீடம் திட்டமிட்டுள்ளது என்று அறிகின்றோம்.

அண்மைக்காலமாகக் கட்சி பலத்த பின்னடைவுகளைச் சந்தித்தமைக்குக் கட்சித் தலைவரின் சுய ஒழுக்கம் சார்ந்த பிரச்சினையே மூலகாரணமாகும்.

கட்சியின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவருடன் அவர் கொண்டிருந்த பாலியல் ரீதியான தகாத உறவுச் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தின.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

பெரும் அதிர்வலைகள்

இதன் வெளிப்பாடாகவே திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனைச் செயலாளர் உள்ளிட்ட சிலர் பூசி மெழுகித் தலைமையைக் காப்பாற்ற முயன்றமை கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்தது.

முன்னதாக, இந்த விடயம் தொடர்பில் கட்சியின் உப தலைவருடன் பேசிய தலைவர் தன் தவறை ஏற்றுக்கொண்டதுடன், தான் எதிர்காலத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை எனத் தலைமைக் குழுவிலும் உறுதியளித்திருந்தார்.

பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா! ரெலோவின் தலைமைக்கு எதிராக மூத்த உறுப்பினர்கள் போர்க்கொடி | Tamil Eelam Liberation Organization Jaffna Press

ஆனால், தற்போது மீண்டும் பதவியைத் தக்கவைக்கத் தலைவரும் செயலாளரும் எடுக்கும் முயற்சிகளினாலேயே கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு அவர்களே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும்  என்றனர்.

நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் ரெலோ கட்சியின் தலைமைக் குழு உறுப்பினரும் யாழ். மாவட்ட செயலாளருமான சபா குகதாஸ், தலைமைக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். வினோநோகராதலிங்கம், கட்சியின் தேசிய அமைப்பாளர் பிரசன்னா இந்திரகுமார், உப தலைவர் ஹென்றி மகேந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US