புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது இலங்கை பாதுகாப்பு அமைச்சு தீவிர கண்காணிப்பு! பந்துல தகவல்
சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது முதலீடுகளை எதிர்பார்த்து புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டதா என அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், முதலீடுகளை பெற தடை நீக்கப்பட்டதாக கூறுவது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
ஐ.நா சட்டவிதிக்களுக்கமைய தடை அல்லது தடை நீக்கம்
1968 ஆம் ஆண்டின் 45 இலக்க ஐக்கிய நாடுகள் சட்டவிதிகளுக்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் அல்லாத அமைப்புகள் மீதான தடை அல்லது தடை நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

அதற்கைமய, 6 புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டது. அண்மைய காலங்களில் குறித்த அமைப்புகளின் நடவடிக்கை தொடர்பாக தொடர்ச்சியான தீவிர கண்காணிப்பின் பின்னரே இந்த தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
எனவே சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கைகளுக்கு அமையவே இந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam