பங்காளிக் கட்சிகளிடம் பகிரங்க மன்னிப்புக்கோரிய தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடம்தான் பகிரங்க மன்னிப்புக்கோரிக்கொள்வதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முள்ளியவளை கிழக்கு வட்டாரத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றிருந்தார்.
பகிரங்கமாக மன்னிப்பு
இந்நிலையில் இன்று (20) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் தேசிய அரசியலின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு தான் ஏற்கனவே ரெலோ, பிளட் , ஈபி ஆர் எல் எஃப் போன்ற அமைப்புகளை ஒட்டுக் குழுக்கள் என்று பொருள்பட பேசியிருந்ததாகவும் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாகவும் இதன்போது தெரிவித்திருந்தார்.
தனக்கு வன்முறை மீது உடன்பாடு கிடையாது. ஆனால் வன்முறை தழுவி எமது விடுதலை பயணத்தை ஒடுக்க முற்பட்டபோது வன்முறையினை கையில் எடுக்கவேண்டிய சூழலிலே பல்வேறு இயக்கங்களில் பல்வேறு இளைஞர்கள் தம் உயிர்களை கொடுத்திருந்தார்கள்.அந்த தியாகங்களை நான் மிகவும் கனதியாக மதிக்கின்றேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
