இழுபறியில் தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைவு
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது குறித்து இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை.
மேலும், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நா.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் வி.மணிவண்ணன், சமத்துவக் கட்சியின் தலைவர் மு.சந்திரகுமார், ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பின் சார்பில் நாவலன், பா.கஜதீபன், உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி இணைவதா இல்லையா என்பது தொடர்பிலான முடிவு கட்சியின் செயலாளர் நாயகத்துடன் பேசி விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் சார்பில் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


