பயங்கரவாத குழு பட்டியலில் தலிபான் அமைப்பை நீக்கிய ரஷ்யா
பயங்கரவாத குழு பட்டியலில் இருந்து தலிபானை நீக்கி ரஷ்யா உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாத குழு பட்டியலில் தலிபான் அமைப்பை வகைப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதனை நீக்கியுள்ளது.
பயங்கரவாத குழு பட்டியலில் வகைப்படுத்தியிருந்ததால், கடந்த 2003ம் ஆண்டில் இருந்து தலிபான் உடன் தொடர்பு வைத்திருந்தால் அது ரஷ்ய சட்டத்தின்படி குற்றமாகும்.
இராஜாங்க ரீதியிலான வெற்றி
தற்போது நீக்கப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபானுக்கு இது இராஜாங்க ரீதியிலான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
பயங்கரவாத அமைப்பு என வகைப்படுத்தப்பட்டதை நீதிமன்றத்தால் இரத்து செய்யப்படும் என கடந்த வருடம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதனடிப்படையில் தடையை நீக்க வேண்டும் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

சீனா, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி... துருக்கி உருவாக்கும் கொடிய ஆயுதம்: இந்தியாவிற்கு கெட்ட செய்தி News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
