அடுத்தடுத்து டொனால்ட் ட்ரம்பிற்கு அதிர்ச்சி கொடுக்கும் சீனா! அமெரிக்காவின் பதிலடி என்ன...
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்நாட்டு மக்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
சீனாவின் இணையத்தள விற்பனை நிறுவனங்களான ஷீன் (Shein) மற்றும் தெமு (Temu) ஆகிய நிறுவனங்கள் பொருட்களின் விலையை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த விலை அதிகரிப்பானது அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வரி
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்காகச் சீனா தற்போது 245 சதவீத வரியினை எதிர்கொள்கின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இவ்வாறு ஏற்றுமதி வரி தொடர்பில் அறிவித்த பின்னர் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சீன இணையத்தள விற்பனை நிறுவனங்களால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தக போர்
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்குச் சீனா கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்த நிலையில், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்கா இவ்வாறு வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தக போர் வலுக்கும் நிலையில், சீனாவின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா என்ன பதிலடி கொடுக்கும் என்பது குறித்து பலரும் எதிர்பார்ப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
