உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலில் இடம்பிடித்த தலிபான் தலைவர்
உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலில் தலிபான் அமைப்பின் இடைக்கால அரசில் துணை பிரதமராக பதவியேற்றுள்ள முல்லா அப்துல் கனி இடம்பிடித்துள்ளார்.
அமெரிக்காவைச் சோ்ந்த ‘டைம்ஸ்’ இதழ் வெளியிட்ட உலக அளவில் மிகுந்த செல்வாக்குள்ள 100 நபா்கள் பட்டியலிலேயே இவ்வாறு இடம்பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அதில் பல்வேறு பிரிவுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. தலைவர்கள் என்ற பிரிவின் கீழ் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஷி ஜின் பிங், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டிருக்கிறது.
டைம்ஸ் இதழ் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அளவில் மிகுந்த செல்வாக்குள்ள 100 போ் பட்டியலை வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான பட்டியலை புதன்கிழமை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam