தலவாக்கலை நகரசபை தவிசாளர் பதவியிலிருந்து நீக்கம்
தலவாக்கலை - லிந்துல நகர சபைத் தலைவர் அசோக சேபால பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகே வெளியிட்டுள்ளள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகர சபை உறுப்பினர் , தலைவர் மீது புகார் அளித்திருந்தார், அதன்படி, இந்த விவகாரம் குறித்து ஆராய ஆளுநர் ஒரு ஆணையத்தை நியமித்திருந்தார்.
இந்த விசாரணைகளில் நகர சபைத் தலைவர் நகராட்சி மன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, தலவாக்கலை - லிந்துல நகர சபைத் தலைவர் ஜனவரி 29 ஆம் திகதி முதல் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்விடயத்தை உள்ளூராட்சித் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையர் நகர சபையின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam