விதுர மற்றும் விஜயதாசவுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - பிரதமரிடம் கோரிக்கை
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க(Vidura Wikramanayake) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapaksa) ஆகியோர் சம்பந்தமான நடவடிக்கை எடுக்குமாறு பொதுஜன பெரமுன பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக 153 வாக்குகள் கிடைத்தன. சுகவீனம் காரணமாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை.
விதுர விக்ரமநாயக்க மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வதாக அறிவித்திருந்த போதிலும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள வரவில்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கட்டுப்பாட்டுடன் கட்சியின் வேலைகளில் கலந்துக்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதால், இவர்கள் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
