சீனாவின் கடும் எதிர்ப்பு: அமெரிக்க ஆதரவு தீவுக்கு பயணமான தாய்வான் ஜனாதிபதி
சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தாய்வான் ஜனாதிபதி வில்லியம் லாய் தனது பசிபிக் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாம் தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
குவாமுக்கான தனது விஜயத்தின் போது, வில்லியம் லாய் அமெரிக்க அதிகாரிகளை ஜனநாயகத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியுள்ளார்.
சீனா, தாய்வான் மீது இராணுவ அழுத்தத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.
சீனாவின் திட்டம்
மேலும்,உலகளாவிய மன்றங்களில் இருந்து தாய்வானை பிரித்து, அதைத் தனிமைப்படுத்த சீனா திட்டமிடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்துகிறது.
இவ்வாறானதொரு சூழலில், தாய்வானுக்கு சர்வதேச ஆதரவை பெறுவதே ஜனாதிபதி லாய்யின் பசிபிக் பயணத்தின் நோக்கம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்று அழைக்கிறது. ஆனால் சீனா தமது ஜனநாயக தீவு பிரதேசத்தின் ஒரு பகுதி என்று வலியுறுத்துகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |