ட்ரம்ப் - ஷீ ஜின்பிங் சந்திப்புக்குப் பின் பரபரப்பு: ட்ரம்ப்புடன் நேரடியாகப் பேசத் தயார் என தாய்வான் அறிவிப்பு
பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உடனான சந்திப்புக்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாய்வான் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் குழப்பத்தைத் ஏற்படுத்தியுள்ளன.
அதனை தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே ஆகியோருக்கு இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தையைத் தங்களது நாடு வரவேற்கும் என்று தாய்வான் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே மோதல்
கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பில், தாய்வான் விவகாரத்தைச் சரியாகக் கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடிக்கும் என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரித்திருந்தார்.
தாய்வானை தங்களின் சொந்த நாடு என்று உரிமை கோரி வரும் சீனா, தேவையெனில் இராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என்று கூறி வருகிறது.

மறுபுறம், இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், தாய்வானுக்கான புதிய ஆயுத விற்பனை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், ஜ லாய் உடன் பேச வாய்ப்புள்ளதாகவும், அதே நேரத்தில் "சுதந்திரம் வேண்டும்" என்று யாராவது கூறுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் பலதரப்பட்ட குழப்பமான கருத்துக்களை முன்வைத்தார்.
1979 ஆம் ஆண்டு வொஷிங்டன் தாய்வானுடனான தூதரக உறவை துண்டித்து சீனாவுடன் இணைந்த பிறகு, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தாய்வான் தலைவருடன் நேரடியாகப் பேசுவது இதுவரை நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்வான் சுதந்திரம்
ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் தாய்வானில் தேவையற்ற கவலைகளை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தாய்வான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சென் மிங்-சி, ட்ரம்ப் உண்மையில் ஜனாதிபதி லாய் உடன் பேச விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தங்களது நாடு மிகவும் ஆவலாக இருப்பதாகக் கூறினார்.

மேலும், சீனாவின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஆயுதங்கள் விரைவில் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், தாய்வான் ஏற்கனவே ஒரு சுதந்திர நாடுதான் என்றும், புதிதாக 'தாய்வான் சுதந்திரம்' என்று பேசுவதற்கு இங்கு எந்த விவகாரமும் இல்லை என்றும் தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri