அரசியலில் சிறுபான்மையின பெண்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு
இலங்கையில் பிரதான அரசியல் நீரோட்டத்தில் சிறுபான்மை இன மற்றும் மதங்களைச் சேர்ந்த பெண்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகவும், அவர்கள் பாரிய கட்டமைப்பு ரீதியான சவால்களுக்கு முகங்கொடுப்பதாகவும் புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த ஆய்வு தொடர்பிலான கூட்டம், கொழும்பு - ரேணுகா சிட்டி ஹோட்டலில் நேற்று(28.01.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, “அடையாள அரசியல் மற்றும் கண்ணுக்குத் தெரியாத தடைகள்: இலங்கையில் சிறுபான்மைப் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம்” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே குறித்த விடயம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் ஒக்ஸ்போர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி, அவசரகால நடைமுறைக்கான மையம் மற்றும் சிறுபான்மை உரிமைக் குழு உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




