சிரியாவில் இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து : 35 பேர் பலி - 30 பேர் காயம்..
சிரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்து கிழக்கு சிரியாவையும் தலைநகரையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையான 'டீய்ர் அல் சூர் - டமாஸ்கஸ்' வீதியில், அல்-சுக்னா மற்றும் பால்மைரா ஆகிய இடங்களுக்கு இடையே நேற்று சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பத் தரம் குறைவு
விபத்துக்குள்ளான ஒரு பேருந்தில் சிரிய உள்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களும், மற்றொரு பேருந்தில் சாதாரண பொதுமக்களும் பயணம் செய்ததாக சிரிய உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக அம்பியூலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், காயமடைந்தவர்களை விரைவாக ஹோமரா இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பல உலங்குவானூர்திகளும் பயன்படுத்தப்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான 'சானா' தெரிவித்துள்ளது.

சிரியாவில் நடந்த நீண்டகால உள்நாட்டுப் போரின் காரணமாக அங்குள்ள உள்கட்டமைப்புகள் மற்றும் வீதிகள் சீரழிந்து காணப்படுவதால், இந்த நெடுஞ்சாலையில் பாதுகாப்புத் தரம் மிகவும் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan