கிளிநொச்சியிலிருந்து வந்த கும்பலால் யாழில் நடத்தப்பட்ட பயங்கர வாள்வீச்சு - மூவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - நாவாந்துறைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு மிக அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாள்வெட்டுத் தாக்குதல்
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி தெரியவருவதாவது, நாவாந்துறைப் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகில் வசிக்கும் குடும்பத்தினருக்கும், கிளிநொச்சி - நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தனிப்பட்ட தகராறு நிலவி வந்துள்ளது.

இந்தப் பகைமையின் காரணமாக, நேற்று அதிகாலை கிளிநொச்சியிலிருந்து பட்டா ரக வாகனமொன்றில் ஆயுதங்களுடன் வந்த நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த வன்முறைக் கும்பலே, நாவாந்துறையில் உள்ள அந்த வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தாக்குதலை நடத்திய பின்னர் அந்தக் கும்பல் வந்த வாகனத்திலேயே தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமறைவாகியுள்ள நாச்சிக்குடா கும்பலைச் சேர்ந்த சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திருமண நிச்சயதார்த்தம்.! எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் ஏறியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam